சூ. 392 :

நூறூர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக் 

கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே  

(97)
 

க-து : 

நூறாயிரம்    என்னும்  சொல்  வருமிடத்து ஏழ் என்னும் சொல்
இயல்பாக நின்றுபுணருமென்கின்றது.
 

பொருள்:   ஏழு என்னும் சொல் நூறு என்பதனைத் தொடர்ந்து வரும்
ஆயிரம்  என்னும் தொகைமொழிக்கு   மேற்    பொதுவிதியாகக்   கூறிய
நெடுமுதல்    குறுக்கம்   இல்லை. உகரக்  கேடு  மேலைச்   சூத்திரத்துக்
கூறப்பட்டது.
 

எ - டு:   எழு  +  நூறாயிரம்  =  ஏழ்நூறாயிரம்  எனவரும். ‘கூறிய’
என்றதனான் சிறுபான்மை எழுநூறாயிரம் எனவருதலும் கொள்க.