பொருள்: (எழு) ஏழ் என்னும் சொல் ஐ, அம், பல் என்னும் இறுதிகளை உடையவாய் வரும் பொருட் பெயரல்லாத எண்ணுப் பெயர்களாகிய தாமரை, வெள்ளம், ஆம்பல், நெய்தல் என்னும் சொற்கள் வருமிடத்தும் மேற்கூறிய இயல்பொடு நிற்கும்.
அஃதாவது நெடுமுதல் குறுகாமலும் உகரம் பெறாமலும் இயல்பாக நிற்கும்.
எ - டு: ஏழ்தாமரை, ஏழ் வெள்ளம், ஏழாம்பல், ஏழ்நெய்தல் எனவரும்.
விகுதிகளைக் கொண்டு பெயர்நிலைக் கிளவிகளைச் சுட்டிக் கூறும் மரபு வடமொழிக்கே உரியதெனக் கருதற்க. அது தமிழுக்கும் உரியதே என்பதை உணர்த்த ‘ஐஅம் பல் என வரூஉம் இறுதி அல்பெயர்’ என்றார். எனவரூஉம் என்றது இவ்வாறு வருவன பிறவும் கொள்க என்றவாறு.