சூ. 394 :உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது 
(99)
 

க-து:

ஏழ்  என்பது  உயிரொடு  புணரின்  திரியாது இயல்பாக வரும்
என்கின்றது.
 

பொருள்:  ஏழ்    என்னும்    சொல்    தன்முன்னர்    மேற்கூறிய
சொற்களேயன்றி  உயிர்முதன்  மொழிவரினும்  இயல்பாகுமென மேற்கூறிய
அவ்விலக்கணத்தின் மாறுபடாது.
 

எ - டு:  ஏழுழக்கு,  ஏழகல்,  ஏழிலை,  ஏழுரி,  ஏழிரண்டு, ஏழைந்து
எனவரும். இங்ஙனம் எல்லாப்பெயரொடும்  ஒட்டிக்  கொள்க.   ஏழிருபது,
ஏழெழுபது என அடையொடுவரினும் ஒக்கும்.