க-து:
பொருள்: ளகர ஈற்றுப் பெயர் வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண்ணகர ஈற்றிற்கு ஓதிய இயல்பிற்றாய் டகரமாகத் திரிந்து புணரும்.
எ - டு: முட்குறை, சிறை, தலை, புறம் எனவரும். உதட்கோடு, செவி,தலை, புறம் எனப் பிறவற்றொடும் ஒட்டிக்கொள்க. (உதள்-ஆடு)