|
சூ. 397 : | மெல்லெழுத் தியையின் ணகார மாகும் | (102) | க-து: | ளகர ஈறு மென்கணம் வரின் திரியுமாறு கூறுகின்றது. |
பொருள்: ளகர ஈற்றுப் பெயர் மெல்லெழுத்துவரின் ணகரமாகத் திரியும். | எ - டு: முண்ஞெரி, முண்ணுனி, முண்மரம் எனவரும். ளகரப்புள்ளிமுன் கசபவய என்பவையன்றிப் பிறமெய்கள் மயங்காமையின் அல்வழியினும் மெல்லெழுத்துவரின் இத்திரிபு எய்துமெனக் கொள்க. | எ - டு: முண்ஞான்றது, முண்ணீண்டது, முண்மாண்டது எனவரும். இஃது உய்த்துக்கொண்டுணர்தல் என்னும் உத்தி. |
|