சூ. 399 :ஆய்தம் நிலையலும் வரைநிலை யின்றே 

தகரம் வரூஉம் காலை யான
(104)
 

க-து:

ளகர ஈறு தகரம் வரும்வழி எய்தும் சிறப்புவிதி கூறுகின்றது.
  

பொருள் :  குற்றெழுத்தைச்   சார்ந்து   ஈரெழுத்தொரு   மொழியாக
நிற்கும் ளகர ஈறு  தகரம்  வருமிடத்து   ஆய்தப்  புள்ளியாகத்   திரிந்து
நிற்றலும் நீக்கும் நிலையின்று. குற்றெழுத்தைச் சார்ந்த ஈரெழுத்தொருமொழி
என்பது ஏற்புழிக் கோடல் என்னும் உத்தி.
 

எ - டு:  முள் + தீது=முஃடீது எனவரும். முஃடீமை  என வேற்றுமைக்
கண்ணும் வரும். உம்மையால் முட்டீது-முட்டீமை எனவும் வரும்.