க-து:
பொருள்: இருள் என்னும் சொல் வெயில் என்னும் சொற்கு ஓதியஇயல்பிற்றாய் அத்தும், இன்னும் ஆகிய சாரியைகள் பெற்றுப் புணரும்.
எ - டு: இருளத்துக் கொண்டான்; இருளிற் கொண்டான், சென்றான,தந்தான், போயினான் எனவரும். ஞான்றான், நீண்டான், மாண்டான்,வந்தான் என ஏனைக் கணத்தும் வரும்.