சூ. 403 :புள்ளும் வள்ளும் தொழிற்பெய ரியல 
(108)
 

க-து:

புள், வள் என்னும் பெயர்கள் உகரம் பெறுமென்கின்றது.
 

பொருள்:   புள், வள்  என்னும்  சொற்கள்  தொழிற் பெயர்க்கு ஓதிய
இயல்பினவாய்  உகரம் பெற்று வல்லெழுத்துவரின்   மிக்கும்   ஞநமவரின்
இயல்பாயும் புணரும்.
 

எ - டு:  புள்ளுக்கடிது, வள்ளுக்கடிது, சிறிது,  தீது, பெரிது எனவரும்.
ஞான்றது,   நீண்டது,  மாண்டது  எனவும்  வரும்.  வேற்றுமைக்கண்ணும்
இவ்வாறே கடுமை, சிறுமை, தீமை, வலிமை என்பவற்றைக்  கூட்டிக் கண்டு
கொள்க.
 

பள்ளுக்கடிது-கடுமை எனச்சிறுபான்மை ஏனையவும் உகரம் பெறுதலைப்
புறனடையாற் கொள்க.