சூ. 407 :

அவற்றுள், 

ஈரொற்றுத் தொடர்மொழி இடைத்தொட ராகா  

(2)
 

க-து :

தொடர்மொழி   ஐந்தனுள்   வல்லெழுத்தும்   மெல்லெழுத்தும்
யரழக்களை அடுத்து வருங்கால் எய்தும் ஐயம் நீக்குகின்றது.
 

பொருள்:  மேற்கூறியவற்றுள்  இடையெழுத்துக்கள்  வல்லெழுத்தையும்
மெல்லெழுத்தையும்   தொடர்ந்து  ஈரொற்றாய்    நிற்கும்  தொடர்மொழி
இடைத்தொடராகா. வன்றொடராகவோ, மென்றொடராகவோ ஆகும்.
 

எ - டு:  வாய்ப்பு, ஈர்க்கு, காழ்ப்பு - இவை வன்றொடர்.
 

மொய்ம்பு    எனவும்   ஆர்ந்து,   சூழ்ந்து   எனவும்  வரும். இவை
மென்றொடர்.  எனவே  சார்பு,  உல்கு, வெய்து,  போழ்து,  தெள்கு  என
இடைத்தொடர் ஓரொற்றாயே வரும் என்பதாயிற்று. வகரம் வல்லொற்றொடு
மயங்காமையின் இடைத்தொடர்  மேற்கூறிய ஐந்துவகையாகவே வரும் என
அறிக.