சூ. 412 :

ஒற்றிடை இனமிகா மொழியுமா ருளவே 

அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகுதி  

(7)
 

க-து:

மேற்கூறிய இருவகை மொழிகட்கும் பிறிதொருவிதி கூறுகின்றது.
 

பொருள் : மேற்கூறிய இருவகை மொழிகளுள்  இடையே  இன  ஒற்று
மிகாத  மொழிகளும்   உள.   அவ்வகை   மொழிகளிடத்து   வருமொழி
வல்லெழுத்து மிகுதல் இல்லை.
 

எ - டு:  நாகுகால், செவி, தலை, புறம்  எனவும்;  வரகுகதிர்,  சினை,
தாள், பதர் எனவும் வரும்.