சூ. 413 :

இடையொற்றுத் தொடரும் ஆய்தத் தொடரும் 

நடையா யியல என்மனார் புலவர் 

(8)
  

க-து:

இடைத்தொடர்,      ஆய்தத்     தொடர்கள்      இயல்பாகப்
புணருமென்கின்றது.
 

பொருள் : இடைத்தொடர்   ஆய்தத்   தொடர்க்   குற்றியலுகரங்கள்
வேற்றுமைக்கண்      வல்லெழுத்தொடு     புணருமிடத்து    மேற்கூறிய
அவ்வியல்பினவாம் எனக்  கூறுவர்   புலவர்.    என்றது;     இயல்பாகப்
புணருமென்றவாறு.
 

எ - டு: தெள்குகால்,  சினை,  தலை,  புறம்  எனவும்  எஃகு, கடுமை,
சிறுமை, தீமை, பெருமை எனவும் வரும்.