சூ. 415 :

மரப்பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை

(10)
 
க-து:

குற்றுகர ஈற்று  மரப்பெயர்கட்கு  அம்முச்  சாரியை  வரும்
என்கின்றது.
 

பொருள் : குற்றியலுகர   ஈற்று  மரப்பெயர்ச்சொற்களுக்கு  அம்முச்
சாரியை வரும். ஏகாரம் இசைநிறை.
 

எ - டு:  தேக்கங்கோடு - வேப்பங்காய், செதிள், தோல், பூ எனவரும்.
தன்னினமுடித்தல் என்னும் உத்தியான் மரத்திற்கு இனமாகிய புல்லும், பூடும்
ஆகியவற்றிற்கும் இவ்விதி கொள்க.
 

எ - டு:  கமுகங்காய், சீழ்கம்புல், கம்பந்தாள், அடும்பங்கொடி எனவும்
நாற்றங்கால், பயிற்றங்காய் எனவும்வரும்.
 

இந்நூற்பா  மரமல்லனவற்றை  மாறுகொளக்  கூறல்   எனத்   தழீஇக்
கொண்ட சிதைவென்பார் பேராசிரியர்.