க-து:
பொருள் : மென்றொடர் மொழியுள் கிளையொற்றாகத்திரியுமென்றவற்றுள் அங்ஙனம் திரியாமல் அம்முச்சாரியையொடுவரும் மரப்பெயர்களும் உளவாம்.
எ - டு: குருந்தங்கோடு; புன்கங்காய், செதிள், தோல், பூ எனவரும்.உம்மையான் வல்லெழுத்தாகத் திரிந்து சாரியை பெறுவனவேபெரும்பான்மை என்க. எ - டு:வேப்பங்காய், கடப்பங்கோடு எனவரும்.இன்னும் அதனானே மரமல்லாத புல்லும் தெங்கங்காய், கருப்பஞ்சாறுஎனவருதலும் கொள்க.