சூ. 417 :

ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் 

அம் இடை வரற்கும் உரியவை யுளவே 

அம்மர பொழுகும் மொழிவயி னான  

(12)
 

க-து : 

 

ஒருசார்     ஈரெழுத்து     மொழியும்    வன்றொடர்மொழியும்
அம்முச்சாரியை பெறும் என்கின்றது.
 

பொருள் : நெடிற்றொடர்     மொழி,   வன்றொடர்    மொழிகளுள்
அம்முச்சாரியை இடையே வருதற்கு உரியவையும்  உள. அங்ஙனம் வருதல்
அம்மரபினான் நடைபெறும் மொழிகளிடத்தேயாம். உம்மை எதிர்மறை.
 

எ - டு:  ஏறங்கோள்,  சூதம்போர்  எனவும்  வட்டம்போர்  எனவும்
வரும். நாகுகால்,  கொக்குக்கால்  இவை   போல்வன   அம்முப்பெறாதன.
“அம்மர  பொழுகும்   மொழிவயி   னான”   என்றதனான்  சிறுபான்மை
விளக்கத்துக்   கொண்டான்   என  அத்துச்சாரியை  பெறுதலும்  கொள்க
என்றார் உரையாசிரியர்.