சூ. 421 :பெண்டென் கிளவிக்கு அன்னும் வரையார்(16)
 

க-து:

பெண்டென்னும்  சொற்கு     எய்தியதன்மேற்     சிறப்புவிதி
கூறுகின்றது.
 

பொருள்:    மேற்கூறியவற்றுள்         பெண்டென்னும்    சொற்கு
இன்சாரியையேயன்றி அன்சாரியை வரினும் நீக்கார் ஆசிரியர்.
 

எ-டு:  பெண்டன்கை, செவி,   தலை,   புறம்   எனவரும்.   ஏனைக்
கணங்களுள் ஒப்பன கூட்டிக் கொள்க.