க-து :
பொருள் : யாது என்னும் நெடிற்றொடர் மொழியாகியவினாப்பெயரிறுதியும், சுட்டுமுதலாகிய ஆய்தத் தொடர்மொழியாகிய(சுட்டுப்) பெயர்களின் இறுதியும், உருபுபுணர்ச்சிக்கு ஓதிய இயல்பினவாய்நிலைபெறும்.
அஃதாவது; இவை அன்சாரியை பெறும். ஆய்தம் தொடர்ந்தசுட்டுப்பெயரிறுதி சாரியை பெற்றபின் ஆய்தம்கெடும் என்றவாறு.
எ-டு: யாதன்கோடு; அதன்கோடு, இதன்கோடு, உதன்கோடு, செவி,தலை, புறம் எனவரும். ஏனைக்கணங்களொடும் ஒட்டிக்கொள்க. அஃது +அன் + கோடு = அதன்கோடு. சாரியை ஏற்றபின் ஆய்தம் கெட்டது.