முன்னுயிர் வருமிடத்து ஆய்தப் புள்ளி
மன்னல் வேண்டும் அல்வழி யான
க-து:
பொருள்: ஆய்தத்தொடர் மொழியாகிய சுட்டுப் பெயர்கள்,அல்வழிக்கண் உயிர்முதன்மொழி வந்து புணருமிடத்துச் சாரியை வருங்கால்கெடுமென்ற ஆய்த எழுத்துக் கெடாது நிலைபெறல் வேண்டும்.
எ-டு: அஃது, இஃது, உஃது என நிறுத்தி அணி, ஆடை, இலை, ஈயல்,உரல், ஊர்தி, எழு, ஏனை, ஐயம், ஒழுக்கம், ஓங்கல், ஒளவியம்என்பவற்றைக் கூட்டி அஃதணி, அஃதாடை என முறையே வருமாறு கண்டுகொள்க.