சூ. 424 :ஏனைமுன் வரினே தானிலை யின்றே(19)
 

க-து :
 

 

மேற்கூறிய   சுட்டுப்பெயர்கள்   ஏனைக்கணத்தொடு புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள்:   ஆய்தத்       தொடர்மொழிச்        சுட்டுப்பெயர்கள்
உயிர்க்கணமில்லாத ஏனைக்கணம் வந்துபுணரின்  மன்னல்  வேண்டுமென்ற
ஆய்தப்புள்ளி நிலைத்தல் இன்று.
 

எ-டு:  அஃது + கடிது = அதுகடிது, சிறிது,   தீது, பெரிது,   ஞான்றது,
நீண்டது, மாண்டது, யாது, வலிது எனவரும்.