எ-டு: நாகு-வரகு-தெள்கு - எஃகு-விலங்கு எனநிறுத்திக் கடிது, சிறிது, தீது, பெரிது எனக்கூட்டி இயல்பாமாறு கண்டுகொள்க. ஏனைக்கணங்கள் இயல்பாமாறு தொகைமரபினுள் (சூ. 2) கூறப்பட்டது. |
“சொல்லிய பண்பின்” என்றதனான், பெயர்ச்சொற்களேயன்றி ஏனைச் சொற்களுள் முற்றுவினைக்கண்; கிடந்தது குதிரை; கரியது குதிரை, செந்நாய், தகர், புல்வாய் எனவும், வினை எச்சத்தின்கண் இருந்து கொண்டான்; கண்டு கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவும், ஏழாவதன் பொருட்டாய் வரும் இடப்பெயர், காலப்பெயர்களிடத்து, அங்கு கொண்டான், இங்கு கொண்டான்; முந்து கொண்டான், பண்டுகொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவும் உரிச்சொற்கள் பழுதுபயமின்றே, முழுது கற்றான், வறிது சிறிதாகும் எனவும் இயல்பாகப் புணருமெனக் கொள்க. |