சூ. 426 :வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே(21)
 

க-து:

வன்றொடர் மொழி அல்வழிக்கண் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:  வன்றொடர்க் குற்றியலுகர ஈறு அல்வழிக்கண் வல்லெழுத்து
வருவழி மிக்குப் புணரும். அல்வழி என்பது அதிகாரத்தான் வந்தது.
 

எ-டு:  கொக்குக்கடிது, சிறிது, தீது, பெரிது எனவரும்.  இனிக்   கற்றுக்
கொண்டான்,  உய்துச்   சென்றான்  என  வினையெச்சத்தின்   கண்ணும்,
மற்றுச்சொல்நோக்காது என  இடைச்சொற்கண்ணும்  சிவப்புக்காந்தள்  என
உரிச்சொற்கண்ணும்     மிக்கது.   சிவப்பாகிய காந்தள்  எனப்  பண்புருபு
விரித்துக் கொள்க.