பொருள்: மேற்கூறியவற்றுள் யாவினாமொழி வல்லெழுத்துமிகுதலேயன்றி இயல்பாயும் புணரும். ஏகாரம் பிரிநிலை.
எ-டு: யாங்கு கொண்டான், சென்றான், தந்தான், போயினான்எனவரும். யாண்டு என்பதனொடும் ஒட்டிக்கொள்க. இது யாங்கனம் எனப்பண்புப்பொருட்டாக வரும் காலையே இயல்பாகும், இடப் பொருளாயின்மிகுமென அறிக.