சூ. 429 :அந்நான் மொழியும் தந்நிலை திரியா(24)
 
க-து:“மெல்லொற்றிறுதி    மெல்லொற்றெல்லாம்      வல்லொற்றிறுதி
கிளையொற்றாகும்”    என்றதனான்    இவையும்    திரியுமென
நின்றதனை விலக்குகின்றது.
 

பொருள்:  மேற்கூறிய    நான்கு     மென்றொடர்     மொழிகளும்
மெல்லொற்றாய தம் நிலையினின்று வல்லொற்றாகத் திரியா.
  

எ-டு:  மேற்காட்டியவே கொள்க. ‘தந்நிலை’ என்றதனான், சுட்டுச்சினை
நீடாது இயல்பாக நிற்கும். அங்கு, இங்கு, உங்கு என்பவையும் திரியா எனக்
கொள்க.