க-து:
பொருள்: தனித்து ஓரெழுத் தொருமொழியாகி வருவன நெட்டெழுத்துஏழுமேயாம்.
எ-டு : ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனவும் கா, நீ, பூ, பே, கை,வௌ எனவும் வரும்.
‘‘மெய்யொடு இயையினும் உயிரியல்திரியாது’’ ‘‘உயிர்மெய் யல்லனமொழி முதலாகா’’ ‘‘உயிர்மெய் யீறும் உயரீற் றியற்றே’’ என்பனமுதலாயவற்றான் நெட்டெழுத்தென்றது உயிர்மெய்யினையும் அகப்படுத்துநின்றதென்க. ஏழும் என்னும் முற்றும்மை விகாரத்தாற்றொக்கது.