|
சூ. 431 : | இருதிசை புணரின் ஏயிடை வருமே | (26) | | க-து : | குற்றுகர ஈற்றுத் திசைப்பெயர்கள் தம்முட் புணருமாறு கூறுகின்றது. | பொருள்: இருவேறு பெருந்திசைகளை உணர்த்தும் சொற்கள் தம்முட்புணரின் ஏ என்னும் சாரியை இடையே வரும். | எ-டு: தெற்கே வடக்கு, வடக்கே தெற்கு, கிழக்கே மேற்கு, மேற்கே கிழக்கு எனவரும். இவற்றிற்கு உம்மை விரிக்க. | ஏ இடைவருமே என்பதனைப் படுத்தலோசையாற் கூறிச் சாரியை இன்றியும் சிறுபான்மை வழங்கும் எனக் கொள்க. தெற்குவடக்கு, கிழக்குமேற்கு எனவரும். வடக்கொடு தெற்குப் புணருமிடத்தும், மேற்கொடு கிழக்குப் புணருமிடத்தும் சாரியை பெற்றே வரும். |
|