சூ. 433 :

ஒன்று முதலாக எட்ட னிறுதி 

எல்லா எண்ணும் பத்தன் முன்வரின் 

குற்றிய லுகரம் மெய்யொடுங் கெடுமே 

முற்ற இன்வரூஉம் இரண்டலங் கடையே  

(28)
 

க-து : 
 

குற்றியலுகர    ஈற்றுச்    சொற்களுள்   எண்ணுப்   பெயர்கள்
பரந்துபட்ட  பல்வேறு விதிகளையுடையவாய்  வழங்கி வருதலின்
அவற்றை வகுத்து  உணர்த்துவான்  றொடங்கி இச்சூத்திரத்தான்
ஒன்று      முதலாய   எண்ணுப்  பெயர்கள்  பத்து   என்னும்
சொல்லொடு புணருமாறு கூறுகின்றார்.
 

பொருள்:  ஒன்று என்னும் சொல் முதலாக எட்டு என்னும் சொல்லீறாக
உள்ள எல்லா எண்ணுப் பெயர்களும், பத்து என்னும் சொல்லின் முன்வந்து
புணரின், பத்து என்பதன்கண் உள்ள குற்றியலுகரம் தான்  ஊர்ந்து நிற்கும்
மெய்யொடு கெடும்.  இரண்டு   என்னும்   எண்ணுப்   பெயர்   தவிர்ந்த
ஏனையவற்றிற்கு இன்சாரியை முழுமையாக வரும்.
 

எ-டு:  பத்து+ ஒன்றுடிபத்+ இன் + ஒன்றுடிபதினொன்று - பதின்மூன்று,
பதினான்கு, பதினைந்து, பதினாறு,   பதினேழு,   பதினெட்டு   எனவரும்.
பதினான்கு என்புழிச் சாரியையினது  னகரக்கேடு   ‘‘நெடியதன்  முன்னர்’’
(தொகை-18) என்னும் விதியாற் கெட்டதென அறிக.