சூ. 438 : | முதலீ ரெண்ணினொற்று ரகர மாகும் |
| உகரம் வருதல் ஆவயி னான |
(33) |
க-து: | பத்தென்பதனொடு புணருங்கால் முதலிரண்டு எண்ணுப் பெயர்கட்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது. |
பொருள்: பத்தொடு புணருமிடத்து முதல் நிற்கும் ஒன்று, இரண்டு என்னும் ஈரெண்களில் உள்ள னகர ஒற்று ரகரமாகத் திரியும். அவ்விடத்து ஓர் உகரம் வருதலைச் செய்யும். |
எ-டு: ஒன்று + பத்து = ஒருபஃது எனவரும். இரண்டு என்னும் சொல் அடுத்த நூற்பாவான் முடியும். அச்சூத்திரம் இதன் பின்னிரண்டு அடிகளாக அமைந்து ஒன்றாக இருத்தல் வேண்டும். உரையாளரால் வழக்கு நோக்கி இரண்டாக வைத்து உரை கூறப்பட்டது என்க. |
‘‘பத்தொடு புணருமிடத்து’’ என்பதனை இனிவரும் நூற்பாக்களொடும் கூட்டிக்கொள்க. |