இடைநிலை ரகரம் இரண்டென் எண்ணிற்கு
நடைமருங் கின்றே பொருள்வயி னான
இரண்டு என்னும் எண்ணிற்கு எஞ்சிய திரிபு கூறுகின்றது.
பொருள்: முற்கூறியவற்றுள் இரண்டு என்னும் எண்ணுப் பெயர்க்குஉரித்தாக இடைநின்ற ரகர உயிர்மெய்தான் அப்பொருளினிடமாகநடைபெறுதலின்று. அஃதாவது ணகர ஒற்று ருகரமாக அப்பொருள்பயத்தலின் இது கெடும் என்றவாறு.
எ-டு: இரண்டு + பத்து = இருபஃது எனவரும்.