|
சூ. 44 : | குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே | (11) | க-து: | இதுவுமது. | பொருள்: குற்றெழுத்து ஐந்தும் தனித்து நிறைவுடைய மொழியாக வருதலில்லை. நிறைவுடைய மொழியாவன பெயரும், வினையுமாம். எனவே குறைவுடையனவாய் இடைச்சொல்லும் உரிச்சொல்லுமாக வரும் என்பது கருத்து. | அஃதாவது சுட்டுப்பெயர் வினாப்பெயர்கட்கு முதனிலையாயும், சுட்டிடைச் சொல்லாயும், ஒப்புணர்த்தும் குறையுரிச்சொல்லாயும் வரும். | எ-டு : அவ்வீடு, இப்பொருள், உக்கடல், எவன், ஒவ்வும், எனவரும். | இனி ஐந்தும் என்னும் முற்றும்மையை எச்சமாக்கி மொழி நிறைபாகச் சிலவருதலும் கொள்க. | எ-டு : து-நொ, எனவரும். இவைபடுத்தலோசையாற் பெயரும், எடுத்த லோசையான் வினையும்ஆம், ஓராற்றான் இவையும் முதனிலைகளே ஆதலின் உம்மையாற்றழுவப்பெற்றன என்க. |
|