சூ. 441 :

மூன்றன் ஒற்றே பகார மாகும்

(36)
 
க-து:

மூன்றற்கும் ஆறற்கும் ரிய திரிபு கூறுகின்றது.
 

பொருள்: மூன்றும்   ஆறும்    ஆகிய   எண்ணுப்    பெயர்களின்
நெட்டெழுத்து மாத்திரை குறுகி நிற்கும்.   அவற்றுள்   மூன்று   என்னும்
பெயரின் னகரஒற்றுப் பகரமாகத் திரியும்.
 

எ-டு:  மூன்று  +  பத்து  =  முப்பஃது;  ஆறு  +  பத்து = அறு ஃது
எனவரும்.  இவை  இரண்டு  சூத்திரம்.  உரையாசிரியர் ஒன்றாக வைத்துக்
கூறுவர்.