சூ. 448 :ஐந்த னொற்றே மெல்லெழுத் தாகும்(43)
 
க-து :ஐந்தென்னும் எண்ணுப் பெயர்க்கு எய்தியதன்மேற்  சிறப்புவிதி
கூறுகின்றது.
 

பொருள்:  ஐந்தென்னும்  எண்ணுப்  பெயர்  கசதபக்கள்  வருமிடத்து
நகரஒற்று வரும்வல்லெழுத்திற்கு ஒத்த மெல்லெழுத்தாகத் திரியும்.
 

எ- டு:  ஐங்கலம், ஐஞ்சாடி, ஐந்தூதை, ஐம்பானை எனவும் ஐங்கழஞ்சு,
தொடி, பலம், எனவும் வரும்.