சூ. 449 :கசதப முதன்மொழி வரூஉங் காலை(44)
 
க-து :மேற்கூறிய இரண்டு சூத்திர விதிகளுக்கு விளக்கங் கூறுகின்றது.

பொருள்: மேல் மூன்றனொற்றிற்கும்    ஐந்தனொற்றிற்கும்    கூறிய
திரிபுகள் கசதபக்கள் வருமொழி முதலாக வருமிடத்தேயாகும்.
 

இஃது மேல் இரண்டு நூற்பாக்களையும் தழுவி    நிற்றலின்   பிரித்துக்
கூறினார். பின்னது நிறுத்தல் என்னும் உத்திபற்றி என்க.