சூ. 450 : | நமவ என்னும் மூன்றொடு சிவணி |
| அகரம் வரினும் எட்டன்முன் இயல்பே |
(45) |
க-து: | எட்டு் என்னும் எண்ணுப்பெயர் இயல்புகணமாக வரும் அளவைப் பெயரொடு புணருமாறு கூறுகின்றது. |
பொருள்: எட்டு என்னும் சொல்லின்முன் அளவுப் பெயராக நமவ என்னும் மூன்றொடு ஒத்து அகரமும், ஆகிய நான்கும் வரின் இயல்பாகப் புணரும். |
வரினும் என்னும் உம்மையை அகரமும் எனக் கூட்டுக. அதனான் சிறுபான்மை உகரமும் கொள்க. நமவஅ என்றது அவற்றை முதலாக உடைய அளவுப் பெயர்களை. |
எ-டு: எண்ணாழி, எண்மண்டை, எண்வட்டி, எண்ணகல், எண்ணுழக்கு எனவரும். உகரம் எட்டுழக்கு எனவும் வருமாதலின் அதனை உம்மையாற்றழுவினார். |