சூ. 451 :

ஐந்தும் மூன்றும் நமவரு காலை 

வந்த தொக்கும் ஒற்றியல் நிலையே 

(46)
 

க-து :
 
 

ஐந்தும்  மூன்றும்  மெல்லின  அளவைப் பெயரொடு புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள்:  ஐந்து,   மூன்று      என்னும்     பெயர்கள்   நகரமகர
அளவுப்பெயர்கள் வருமிடத்து ஒற்றிலக்கணம்,   வந்த அவ் எழுத்துக்களை
ஒத்து நிற்பதாகும்.
 

எ-டு: ஐந்நாழி -   ஐம்மண்டை  எனவும்  முந்நாழி -   மும்மண்டை
எனவும் வரும். எதுகை நயம் நோக்கி ஐந்து  முற்கூறப்பட்டது.   அதனான்
‘‘ஐநாழி’’ எனச் சிறுபான்மை நகரங்குன்றி வருமேனும் கொள்க.