சூ. 452 : | மூன்றன் ஒற்றே வகரம் வருவழித் |
| தோன்றிய வகரத் துருவா கும்மே |
(47) |
க-து : | மூன்றென்னும் சொல் வகரமுதல் அளவுப் பெயரொடு புணருமாறு கூறுகின்றது. |
பொருள்: மூன்று என்னும் எண்ணுப் பெயரின் னகர ஒற்று வருமொழி வகரமாகியவிடத்து வருமொழியாகத் தோன்றிய வகரத்தின் உருவாகத்திரியும். |
எ-டு: முவ்வட்டி எனவரும். மூவட்டி என்பது வழூஉ வழக்கு. |