சூ. 453 :நான்கன் ஒற்றே லகார மாகும்(48)
 
க-து:நான்கென்னும் சொல் வகரமுதல் அளவுப் பெயரொடு புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள்:  நான்கு என்னும் எண்ணுப்  பெயரின்  னகர  ஒற்று,  வகர
முதல்  அளவுப் பெயர்   வருமிடத்து   லகர   ஒற்றாகத்  திரியும். எ-டு:
நால்வட்டி எனவரும்.