சூ. 454 :ஐந்தன் ஒற்றே முந்தையது கெடுமே(49)
 
க-து:ஐந்து  என்னும் சொல்  அவ்அளவுப்   பெயரொடு  புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள்:  ஐந்தென்னும் எண்ணுப் பெயரின் நகர ஒற்றுத்    தன்முன்
வரும் அவ் வகர ஒற்றாய்த் திரிந்து பின்னர்க்கெடும். ஆய் என்னும் வினை
எச்சம் விகாரத்தாற்றொக்கது.
 

எ-டு: ஐவட்டி   எனவரும்.     முந்தையதாய்க்   கெடுமென்றதனான்
சிறுபான்மை கெடாது ஐவ்வட்டி என வருதலுமாம்.