முதல்இரு எண்ணுப் பெயர்கள் உயிர் முதல் அளவைப் பெயர்களொடு புணருமாறு கூறுகின்றது.
பொருள்:ஒரு, இரு எனத்திரிந்து நிற்கும் முதல் இரண்டு எண்ணுப் பெயர்களின் முன்னர் உயிர்முதல் அளவுப் பெயர்கள் வருமிடத்து இறுதி உகரம் கெடுமெனக் கூறுவர். அவ்விடத்து முதனிலையாக நிற்கும் எழுத்துக்கள் மாத்திரை நீடலைச் செய்யும்.