சூ. 456 :

மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியும் 

தோன்றிய வகரத் தியற்கை யாகும்  

(51)
 

க-து:

மூன்று நான்கு ஐந்து ஆகிய எண்ணுப்  பெயர்கள்  உயிர்முதல்
அளவுப் பெயரொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:  மூன்று நான்கு ஐந்து என்னும் எண்ணுப்  பெயர்கள்  உயிர்
முதலாகிய  அளவுப்  பெயர்வரின்  மேல்  வகரம்  வருமிடத்திற்கு  ஓதிய
இயல்பினவாகும்.
 

அஃதாவது, மூன்றன் னகரம் வகரமாகவும் நான்கன் னகரம் லகரமாகவும்
ஐந்தன் நகரம் கெட்டும் புணருமென்றவாறு.
 

எ-டு:  முவ்வகல், முவ்வுழக்கு எனவும்;  நாலகல்,  நாலுழக்கு  எனவும்;
ஐயகல், ஐயுழக்கு எனவும் வரும்.  ஐவுழக்கு  என  வகரமாய்க்  கெடாதும்
வரும்.
 

ஐயகல், ஐயுழக்கு என்புழி யகரம் உடம்படுமெய்யென அறிக.