சூ. 457 : | மூன்றன் முதனிலை நீடலும் உரித்தே |
| உழக்கென் கிளவி வழக்கத் தான |
(52) |
க-து : | மேற்கூறியவற்றுள் மூன்றென்பதற்குச் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள்: மேற்கூறிய எண்ணுப் பெயருள் மூன்றென்னும் சொல்லின் முதலெழுத்து (முன்னர்க்குறுகி நின்ற நிலைமாறி) நீளுதலும் உரித்து உழக்கென்னும்சொல் வருமொழியாக வழங்குமிடத்து. உம்மையான் நீடாது வருதலே வலியுடைத்தென்பது பெறப்படும். |
எ-டு: மூவுழக்கு எனவரும் ‘‘வழக்கத்தான’’ என்றதனான் அகல் என்னும் சொல்லொடு புணரும் காலை முவ்வகல் எனச் சிறுபான்மை வருதலும் கொள்க. |