சூ. 458 :ஆறென் கிளவி முதல்நீ டும்மே
(53)
 

க-து:

ஆறு   என்னும்   சொல்  உயிர்முதல்  அளவுப்  பெயரொடு
புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:  முன்னர்க்    குறுகிநின்ற    ஆறு    என்னும்    சொல்
உயிர்முதலாகிய அளவுப்பெயர் வருங்கால் நீண்டுநிற்கும்.
 

எ-டு:  ஆறகல் - ஆறுழக்கு  எனவரும். ஏகாரம்  இசைநிறை.  நீடாது
நின்றவழி   உடம்படுமெய்    பெற்றுப்   புணரவேண்டுதலின்   நீண்டது.
நீண்டவழிக்  குற்றியலுகரமாய்விடுதலின்  அதன்கண்  உயிர்  ஏறிமுடிந்தது.
மூன்று,   ஆறு   எனத்   திரிந்ததன்   திரிபு  அது  என்னும்  நயத்தாற்
கூறப்பட்டன.