என்றது ; மெய்யெழுத்துக்கள் தம்மைச்சுட்டி உணர்த்த வருமிடத்து அ என்னும் சாரியை இடைச்சொல்லைப்பொருந்தியே இயங்கும் என்றவாறு. |
எ-டு : வல்லெழுத்தென்ப கசடதபற எனவரும். ஈண்டுக் கசடதபற என்பவை உயிர்மெய்யை உணர்த்தாமல் இக், இச், இட், இத், இப், இற் என்னும் புள்ளி மெய்யை உணர்த்தி நின்றன. |
இச்சூத்திரம் தனியெழுத்துப்பற்றிய இலக்கணமாயினும் அவை அகரமாகிய சாரியை இடைச்சொல்லொடு கூடி, மொழித் தன்மையுற்றுப் பிறபொருள் தருதலின் ஈண்டுக் கூறப்பட்டதென்க. |
| ‘‘தன்னை உணர்த்தின் எழுத்தாம் பிறபொருள் |
| சுட்டுதற் கண்ணேயாம் சொல்’’ |
என்பதனான் எழுத்திற்கும் சொல்லிற்கும் வேற்றுமையறிக. |
அகரம் சாரியையாங்கால் எழுத்தாகாது இடைச்சொல்லாகுமென்க. |