சூ. 461 :மூன்றன் ஒற்றே நகார மாகும் 
(56)
 

க-து:

மூன்று   என்பது   நூறென்பதனொடு  புணர்தற்கு  எய்தியதன்
மேற்சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள்:  மூன்று என்னும் எண்ணுப்  பெயரினது னகர  ஒற்று  நூறு
என்பதனொடு புணருமிடத்து நகரமாகத் திரியும்.
 

எ-டு:   மூன்று  டி  முன்று  டி  முன்  டி  முந்  டி நூறு = முந்நூறு
எனவரும்.