க-து:
பொருள்: நான்கு ஐந்து என்னும் எண்ணுப் பெயர்கள்நூறென்பதனொடு புணருங்கால் ஒற்றாக நின்ற னகரமும் நகரமும் வடிவுதிரியாமல் நிற்கும்.
எ-டு: நானூறு-ஐந்நூறு எனவரும். நானூறு என்பதன்கண் நிலைமொழினகரக்கேடு ‘‘நெடியதன் முன்னர்’’ (தொகை-18) என்னும் விதியாற்கெட்டதென்க.