சூ. 464 :

ஆயிரக் கிளவி வரூஉங் காலை

முதலீ ரெண்ணின் உகரங் கெடுமே

(59)
 

க-து:

ஒன்றுமுதல்  ஒன்பானிறுதியாக  உள்ள  எண்ணுப்  பெயர்கள்
ஆயிரம்  என்னும்  சொல்லொடு புணருமாறு   கூறத்தொடங்கி
இச்சூத்திரத்தான்   முதல்    இரு  எண்கள்    ஆயிரத்தொடு
புணருமாறு கூறுகின்றார்.
 

பொருள்:  ஒரு  இரு  என   விதியீறாக  நின்ற  முதலிரு  எண்ணுப்
பெயர்கள் ஆயிரம் என்னும்  சொல்  வருமிடத்து  இறுதி உகரம் கெட்டுப்
புணரும்.
 

எ-டு:  ஒராயிரம்-இராயிரம் எனவரும்.