(61)
க-து:
பொருள்: மூன்றென்னும் சொல் ஆயிரம் என்பதனொடு புணருங்கால்னகர ஒற்று வகரமாகத் திரியும்.
எ-டு: முவ்வாயிரம் எனவரும். வகரம் குறியதன்முன் ஒற்றாதலின்இரட்டித்துப் புணர்ந்தது. முதனிலை நீடினும் என்பதனை அதிகாரத்தாற்கொண்டு மூவாயிரம் எனவருதலும் கொள்க.