க-து :
பொருள்: ஐந்து என்னும் எண்ணுப் பெயரின் நகர ஒற்றுஆயிரத்தொடு புணருமிடத்து யகரமாகத் திரியும்.
எ-டு: ஐயாயிரம் எனவரும். நகரம் திரியாமல் கெடின் யகரஉடம்படுமெய் பெற்றுப் புணர வேண்டுதலின் திரியுமென்றலேசால்புடைத்தாதலறிக.