சூ. 470 :

ஒன்பான் இறுதி உருவுநிலை திரியாது

இன்பெறல் வேண்டும் சாரியை மரபே

(65)
 

க-து:

ஒன்பது என்னும் பெயர் ஆயிரத்தொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்:  ஒன்பான் என வழங்கும் ஒன்பது  என்னும் எண்ணுப்பெயர்
ஆயிரத்தொடு புணருங்கால் குற்றுகரஇறுதி  உருவம் தன்நிலை  திரியாமல்
இன் சாரியை பெறுதல் மரபாகும்.
 

எ-டு:  ஒன்பதினாயிரம்    எனவரும்.    இச்சூத்திரத்திற்கு   முன்னர்
எட்டு  என்பது   ஆயிரத்தொடு  புணர்தற்குரிய  விதி   கூறிய  சூத்திரம்
இருந்திருத்தல்     வேண்டும்.      அதுகாணாமையான்    இச்சூத்திரத்து
‘‘உருவுநிலை  திரியாது’’  என்றதனான்  எட்டென்பதன்  ஒற்றுத்திரியாமல்
எண்ணாயிரம் எனப்புணரும் எனக் கொள்க.