சூ. 476 :

ஆயிரம் வரினே இன்ஆம் சாரியை

ஆவயின் ஒற்றிடை மிகுதல் இல்லை

(72)
 

க-து:

ஒருபஃது  முதலாயவை  ஆயிரம்  என்பதனொடு  புணருமாறு
கூறுகின்றது.
 

பொருள்:  மேற்கூறிய ஒன்று  முதலாகிய  பத்தூர்  கிளவியின்  முன்
ஆயிரம் என்னும் எண்ணுப் பெயர்வரின் ஆண்டு இன்சாரியை வருதலாகும்.
அவ்விடையே தகர  ஒற்றுமிகுதல்  இல்லை.  ஆய்தக்கேடு  அதிகாரத்தாற்
பெறப்படும்.
 

எ-டு:  ஒருபதினாயிரம், இருபதினாயிரம்,  முப்பதினாயிரம்  எனவரும்.
பிறவற்றொடும்     கூட்டிக்    கொள்க.    நூற்றிருபதினாயிரம்,    நூற்று
முப்பதினாயிரம், என அடையடுத்து வருதலும் கொள்க.