பொருள்:ஒருபஃது முதலாய எண்ணுப் பெயரின் முன் அளவுப் பெயரும் நிறைப்பெயரும் வரின் மேற்கூறிய இலக்கணத்தினின்று திரியமாட்டா. அஃதாவது ஆய்தம் கெடும்; ஒற்றிடை மிகாது; இன்சாரியை பெறும் என்றவாறு.
எ-டு:ஒருபதின்கலம்; இருபதின்கலம், சாடி, தூதை, பானை, நாழி, மண்டை, வட்டி, அகல், உழக்கு எனவும்; ஒருபதின் கழஞ்சு, கஃசு, தொடி, பலம் எனவும் வரும்.
‘‘திரியா என்றதனான்’’ இன்னின் னகரம் திரிந்து ஒருபதிற்றுக் கலம், ஒருபதிற்றுக் கழஞ்சு எனச் சிறுபான்மை வருதல் கொள்க. ஏனையவற்றொடும் ஒட்டிக் கொள்க.