உயிர்மெய்யே மொழி முதலாகும் எனக்கூறாமல், அல்லன ஆகா என எதிர்மறை வகையாற் கூறியதன் காரணம், உயிர்மெய் என்பது மெய்யின் ஒருநிலையே என்பதைப் புலப்படுத்தவும், உயிர்மெய்எழுத்து எண்ணுதல் வகையான் ஒன்றேயாயினும், பிற எழுத்தொடு புணருமிடத்து ஒலிக்கூறுபாட்டான் இரண்டாகப் பகுத்துக்கொள்ளப்படும் என்பதை உணர்த்தவுமாம். இதனை வேற்றுமை நயம் என்று கூறுவர் உரையாளர். அவற்றுள் முதலாக வருதற்குரியவையும் அவை வருமாறும் மேற்கூறுப. |